இலஞ்சம் பெற்ற மொனராகலை பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

மொனராகலை பிரதேச சபையின் வருமான வரிப் பரிசோதகர்  ஒருவர், வர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்ட போது இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பகுதியில் டெண்டர்  அடிப்படையில் மாட்டிறைச்சிக் கடை மற்றும் பொது மலசலகூடத்தை நடத்திவரும் இரு வர்த்தகர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வர்த்தக நிலையங்களை சீல் வைக்காமல் இருப்பதற்கும், நிலுவையில் உள்ள டெண்டர் தவணைப் பணத்தைச் செலுத்த அவகாசம் பெற்றுத் தருவதற்கும் உதவியாக குறித்த உத்தியோகத்தர் இலஞ்சம் கோரியுள்ளார்.

ஆரம்பத்தில் 100,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிய அவர், அதில் 10,000 ரூபாவை முன்னரே பெற்றுள்ளார்.

எஞ்சிய தொகையிலிருந்து 50,000 ரூபா பணத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை  (29) காலை 8.55 மணியளவில் மொனராகலை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பொது மலசலகூடத்தின் மேல் மாடியில் வைத்துப் பெற்றுக்கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இலஞ்ச அல்