உடுப்பிட்டி மகளிர் கல்லூரி வளாகத்தில் மனிதப் புதைகுழி..!

வல்வைப் படுகொலை இழப்பீடு தொடர்பான ITJP சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (19) இடம்பெற்ற வல்வைப் படுகொலை இழப்பீடு பரிந்துரையை சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அறிக்கையை வெளியீடு செய்தது.

இதன் போது இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி் வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கண்கண்ட சாட்சியின் அடிப்படையில் குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் ITJP சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்றிட்ட வல்வைப் படுகொலை இழப்பீடு பரிந்துரை அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த மனிதப் புதைகுழியை ஸ்கான் பரிசோதனை மேற்கொண்டு அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுமென கண்கண்ட சாட்சியும் வல்வைப்படுகொலை ஆவணப் புத்தகத்தை ஆக்கியவருமான ந.அனந்தராஜ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் வைத்து ஊடகங்களினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.