எரிபொருளுக்கான QR குறியீட்டைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை நிவர்த்தி செய்து கொள்ள 076 000 1919 விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் ஒன்பது WhatsApp இலக்கங்கள் அறிமுக்கப்படுத்தியுள்ளன.
சுமார் 600,000 பிழையான கியூ.ஆர் குறியீடுகள் முன்னதாக சரிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமக்கு கியூ.ஆர் குறியீடு இல்லை எனக் கூறி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நபர்களைக் கண்டறிவதற்காக விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.





