மன்னாரர் மாவட்டத்தின், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்ற மையை கண்டித்து இன்று புதன்கிழமை ( 31) காலை முசலி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் கிராம அலுவலகர் ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் சிலாபத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தாக்கியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் முசலி பிரதேச கிராம அலுவலர்கள் ஒன்றிணைந்து முசலி பிரதேச செயலகத்திற்கு முன் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதோடு,கிராம அலுவலரை தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் அனர்த்தம் தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு அமைய செயல்படும் போது பொது மக்களால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அறிவித்தலுக்கு மாறாக நாம் எவ்வாறு செயல்படுவது? என கேள்வி எழுப்பியதோடு,எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










