கிழக்கு மாகாணத்தின் மூன்று அறநெறிப் பாடசாலைகளுக்குச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் 127 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய சீருடைத் துணிகள் சனிக்கிழமை (28.02.2026) கையளிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை வெருகல் பிரதேசத்திலுள்ள கறுக்காமுனை அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 48 மாணவர்களுக்கும், புன்னையடி அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கும் 85 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய சீருடைத் துணிகள் வழங்கப்பட்டுள்ளன.
அம்பாறை பொத்துவில் பிரதேசத்திலுள்ள குண்டுமடு அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 102 மாணவர்களுக்கான 42 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய சீருடைத் துணிகளும் கையளிக்கப்பட்டுள்ளன.




