கீரிமலை தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையிடம் நூறு வருடங்களுக்குக் கையளிப்பு

கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம் வலிகாமம் வடக்குப் பிரதேச சபையிடம் நூறு ஆண்டுகளுக்குக் குத்தகை அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன்,  இந்துக் குருமார்கள், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் திருமதி.சிவகெங்கா சுதீஸ்னர், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சிவகுமாரன் சிவானந்தன், நலன் விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.