கீரிமலையில் இடம்பெற்ற மாபெரும் இரத்தான முகாம்

விதையனைத்தும் விருட்சமே இளைஞர் அணியினரும், கருகம்பனைப் பொது அமைப்புக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22.01.2026) கீரிமலை கருகம்பனைக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் 51 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.