மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 லோஞ்சர் ரக ஆயுதங்களை வெள்ளிக்கிழமை (06) விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குடும்பிமலை பகுதியில் அரங்கலாவ இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




