குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்த யாத்திரீகர்கள் சிவனொளிபாத மலையடிவாரத்தை அடைந்தனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து சிவனொளிபாத மலை வரை பாத யாத்திரை சென்றவர்கள் புதன்கிழமை (18) மலையடிவாரத்தை அடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை (14) முல்லைத்தீவு குருந்தூர் மலையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது.

நுவரெலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எலிய பௌத்த விகாரையில் யாத்திரீகர்கள் தங்கியிருந்து, தொடர்ந்து பயணித்து, சிவனொளிபாத மலை அடிவாரத்தை அடைந்துள்ளனர்.