கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (02) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து, 01 கிலோகிராம் 154 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




