கைதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு எதிர்ப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அண்மையில் மாற்றப்பட்ட   கைதிகளுக்குச் இன்று (13) திங்கட்கிழமை சட்ட ஆலோசனை வழங்கச் சென்ற சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினர், சிறைச்சாலை அத்தியட்சகரிடம் அனுமதி கோரியபோது, சிறைச்சாலை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் மட்டுமே அதற்கான கலந்துரையாடலை நடத்த முடியும் என சிறைச்சாலைத் தரப்பால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிபந்தனைகள் கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயலாக அமைந்துள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு, தடைகளுக்கு எதிராகச் சிறைச்சாலை தலைமையகத்தில் எழுத்துமூல முறைப்பாட்டு கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளனர்.