கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றதடுப்புப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று புதன்கிழமை (19) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலொங்கொட – ஹசலக்க பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்தபோது, குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 12 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு குற்றதடுப்புப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.