கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு

கொழும்பு மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) தோல்வியடைந்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும், சிறிய குழுக்களின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை அமைத்தது.

எனினும், கூட்டு எதிர்க்கட்சி எதிராக வாக்களித்ததையடுத்து சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

60 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும் 57 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.