சிறிலங்கா காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி ஊர்காவற்துறையில் போராட்டம்

யாழ் அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் அருள்பயசுக்கு நீதி கோரி   செவ்வாய்க்கிழமை (10.03.2026) மனித உரிமை ஆர்வலர்களின் ஏற்பாட்டில் யாழ்.ஊர்காவற்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்களுடன் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்ப உறவுகளும் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அருள்பயசின் கொலைக்கு நீதி வேண்டும், குற்றங்களால் வியாக்கியானப்படுத்திக் கொலையை மூடி மறைக்காதே! உள்ளிட்ட தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தமது கைகளில் ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.