சிறைக்குள் பெண்களுக்கு நடப்பது என்ன?

சிறைச்சாலைக்குள் பெண் கைதிகள் பிரிவில் கடுமையான நெரிசல் நிலவுவதாக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைக்குள் இருந்தபோது தான் கண்ட பல விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திரும்பிப் படுப்பதற்குக்கூட இடவசதி இல்லாத ஒரு அறைக்குள் 6 பேர் தங்கவைக்கப்படுகின்றனர்.

பெண்கள் பிரிவில் பத்திற்கு பத்து அளவிலான சிறிய அறைகளே காணப்படுகின்றன. ஒரு தடவை சிறைக்குள் பெண் கைதிகளின் எண்ணிக்கை 60ஆக காணப்பட்டபோது ஒரு அறைக்குள் 10 பேர் வீதம் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அந்த 60 பேருக்கும் 2 கழிப்பறைகளே காணப்பட்டன. சிறைச்சாலைகளுக்குள் நிலவும் இவ்வாறான சூழல் பெண்களின் சுகாதாரத்தை கேள்விக் குறியாக்குகிறது.