சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவினை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்யெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் பெண்களின் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச பெண்கள் தினத்திற்கு இணைவாக நிலையான வாழ்தலைநோக்கி ஒன்றிணைவோம் என்னும் தொனிபொருளில் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இதனை முன்னிட்டு சூரிய வள நிலையத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக பறை மேளங்கள் முழங்க பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பெண்களின் வினோத உடைகள் அணிந்தவாறு இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
பெண்களின் பிரதிநிதித்துவம் தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் அவசியமானது,எல்லா சந்தர்ப்பத்திலும் ஒப்புதல் இன்றி உடலுறவு குற்றமே,அனைவருக்கும் குறைந்தபட்ச திருமணவயது 18ஆகவேண்டும்,வீட்டு வன்முறை வேண்டாம்,நீதிகோரும் சகோதரிகளாக நாங்கள் ஒன்றிணைவோம் போன்ற பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு பேரணியானது நடைபெற்றது.
பேரணியானது கல்லடி பாலம் ஊடாக கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீமுருகன் விளையாட்டு மைதானத்தினை சென்றடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் விசேடமாக சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுக்கவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.





