ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் பலி!

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முஜாஹித் முஹம்மது சஹ்ரின்  என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன், கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய நண்பர் சகிதம் தலைமுடி வெட்டுவதற்காக சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்திற்குள் நேற்று இரவு உள்நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்னாரைச் சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் பலி! வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் | Jinthuppitti Gun Shoot

மேலும், படுகாயமடைந்த ஏனையவர்கள் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

T-56 ரக துப்பாக்கி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் பலி! வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் | Jinthuppitti Gun Shoot

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞன் பலி! வெளிவந்துள்ள மேலதிக தகவல்கள் | Jinthuppitti Gun Shoot