தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் யாழ்.மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (27.10.2024) பிற்பகல்-12.30 மணியளவில் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை யாழ்ப்பாணத்திலுள்ள ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அத்துடன் தேர்தலில் வெற்றிபெற வேண்டித் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஆயரிடம் ஆசிகளும் பெற்றுக் கொண்டனர்.