தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி. அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (13.12.2025) மாலை யாழ் கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்துக்கு முன்பாக ஈகச் சுடரேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற் றன.







