வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தீபாவளித் திருநாளான திங்கட்கிழமை (20.10.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தால் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துசமய அமைப்புக்களால், தீபாவளியன்று மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கமையக் குறித்த நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.