துப்பாக்கி, போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் வீதியில், ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று (19) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி, 07 கிலோகிராம் 974 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 01 கிலோகிராம் 580 கிராம் கஞ்சா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.