கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் தி.வரதன் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களை எதிர்காலத் தொழில் உலகுக்கு இணைக்கும் நோக்குடன் கணனிக் கற்கை, ஆங்கிலம், வழிகாட்டல் ஆலோசனை ஆகிய கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






