தெஹிவளை – கடவத்த வீதிப் பகுதியில் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நபரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபரகட பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தெஹிவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.





