தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், அரசாங்க தகவல் மையம் விசேட வட்ஸ்அப் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதிவின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது சிக்கல்களை எதிர்நோக்குபவர்கள், பின்வரும் நடைமுறையைப் பின்பற்றி தமது விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்:
076 000 1919 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு உங்கள் வாகன இலக்கத்தை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
(குறிப்பு: வாகன இலக்கத்தைப் புகைப்படமாக அனுப்ப வேண்டாம்).
வாகன இலக்கத்தை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
அத்துடன் தேசிய அடையாள அட்டை (NIC)
ஓட்டுநர் உரிமம் (Driving License) அல்லது கடவுச்சீட்டு
செல்லுபடியாகும் வாகன வருமான உத்தரவுப்பத்திரம் (Vehicle Revenue License)
வாகனப் பதிவுச் சான்றிதழ் (Vehicle Registration Certificate)
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் தெளிவான படங்களை அனுப்ப வேண்டும்.
வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.
சமர்ப்பிக்கப்படும் அடையாள அட்டை இலக்கமானது, வாகனப் பதிவுச் சான்றிதழில் உள்ள உரிமையாளரின் இலக்கத்துடன் ஒத்துப்போவது அவசியமாகும்.
அனுப்பப்படும் அனைத்துத் தனிப்பட்ட தரவுகளும் 2022ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என அரசாங்க தகவல் மையம் உறுதி அளித்துள்ளது.





