“Gift of Vision”எனும் விசேட கண் சிகிச்சை செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைவதை முன்னிட்டு, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் புரை (Cataract) உள்ள 1000 நோயாளிகளுக்கு விசேட சத்திரசிகிச்சை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று (22) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்தியசாலைக்கு நேரில் சென்று அதன் முன்னேற்றங்களை அவதானித்தார்.
எத்தகைய சவால்கள் அல்லது பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும், சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதியை குறைக்கப்போவதில்லை என அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கையின் சுகாதார சேவையை நிறுவனங்களை மையப்படுத்திய சேவையிலிருந்து, பிரஜைகளை மையப்படுத்திய சேவையாக மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புற்றுநோய், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் கண் நோய்கள் உள்ளிட்ட தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இச் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான உயர்தரமான கண் வில்லைகளை (Eye Lenses) பிரித்தானியாவின் ‘யுளளளைவ சுசு’ அமைப்பின் ஊடாக கலாநிதி சர்வேஸ்வரன் மற்றும் சிங்க சங்கத்தினர் (Lions Club) இலவசமாக வழங்கியுள்ளனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட “Gift of Vision” திட்டத்தின் ஊடாக இதுவரை 4000-க்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது 2026 ஆம் ஆண்டில் நடத்தப்படும் மூன்றாவது விசேட செயற்திட்டமாகும்.



