தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொது மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் பெளர்ணமி தினமான திங்கட்கிழமை (02.03.2026) காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) மாலை-04.30 மணிக்கு ஆரம்பமான போராட்டம் மாலை-06 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இந் நிலையில் இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. தொடர் போராட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னனணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்ரர், கட்சியின் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.