தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (31.03.2026) மாலை-04.45 மணியளவில் ஆரம்பமாகி மாலை-06 மணி வரை இடம்பெற்றது.

இதேவேளை, பெளர்ணமி தினமான புதன்கிழமையும் (01.04.2026) காலை-07 மணி தொடக்கம் மாலை-06 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.