நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனை நினைவு கூறி “கானல் நீதி” எனும் தலைப்பில் கலந்துரையாடல்

திருகோணமலையில் 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் “கானல் நீதி” எனும் தலைப்பிலான உரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் திங்கட்கிழமை (6) இடம்பெற்றது.

இதன்போது வைத்தியர் மனோகரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செய்யப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், அரசியல் செயற்பாட்டாளர் இ.ரஜீவ்காந், பத்திரிகையாளர் அ.நிக்ஸன், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் தலைவர் கலாநிதி.தி.விக்னேஸ்வரன், ஜக்கிய சேசலிஷ கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரெரா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.