நீதிமன்றக் கட்டமைப்பை சீர்குலைக்க அரசாங்கம் முயற்சி! மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிப்பதாக பொதுஜன பெரமுண கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனப்படுத்தும் போக்கை வெளிப்படையாக கையாளுகின்றனர்.

 

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தாம் அலட்சியப்படுத்துவதாக அவர்கள் வெளிப்படையாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு கட்டளையிடுகின்றனர்.