நுவரெலியாவில் நீர்மட்டம் வீழ்ச்சி : மின் உற்பத்தியும் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அங்குள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பாரியளவில் குறைந்துள்ளதால், நீர் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வறட்சியின் தாக்கத்தினால் புகழ்பெற்ற டெவோன் மற்றும் சென் கிளயார் ஆகிய நீர்வீழ்ச்சிகளின் நீரோட்டம் மிகக் குறைந்த மட்டத்துக்குச் சென்றுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளங்கள், ஆறுகள் மற்றும் சிற்றாறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்