பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில முன்னிலை!

வாக்குமூலம் வழங்குவதற்காக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று திங்கட்கிழமை (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

07ஆவது உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தல் நிகழ்வின் போது அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.