சமூகநலன் சார்ந்த தமிழ்ப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிராக எதிர்வரும் சனிக்கிழமை (28.02.2026) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப் போராட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (25.02.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே போராட்ட ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் சனிக்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகிப் பின்னர் பேரணியாக யாழ் சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தைச் சென்றடைந்து நிறைவடையும். அனைத்துத் தரப்பினரையும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பூரண ஆதரவு வழங்க வேண்டுமெனவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.




