பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன இளம் மீனவர் சடலமாக மீட்பு

யாழ் வடமராட்சி வடக்குப் பருத்தித்துறைக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இளம் மீனவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படகிலிருந்து தவறி விழுந்து காணாமல் போன நிலையில்   ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (வயது- 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீனவர்களின் தொடர்ச்சியான தேடுதலின் பின்னரே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.