பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூன்று உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை (26) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றில் முன்னிலையான மூன்று உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து 37 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று , சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல் வைக்குமாறும் உத்தரவிட்டது.