பாணந்துறை வாலனை ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (29) புதன்கிழமை குறித்த பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகே வைத்து, அவர் தனது டி-56 ரகத் துப்பாக்கியால் இவ்வாறு சுட்டுக்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உடனடியாகப் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாலனை ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த பேரதெனிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




