கிழக்கு மாகாணத்தின் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் வீடுகள் பாதிக்கப்பட்ட 23,889 குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்க 597,225,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்தணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
அதிகூடிய எண்ணிக்கையான 14070 குடும்பங்கள் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூபா 25000 வீதம் மொத்தமாக ரூபா 351,750,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,128 குடும்பங்களுக்கு ரூபா 203,200,000 நிதியும்,அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1691 குடும்பங்களுக்கு மொத்தமாக ரூபா 42,275,000/00 நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அம்பாறையில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை யில் பாதிக்கப்பட்ட 1873 குடும்பங்களுக்கும்,மட்டக்களப்பில் 1121 குடும்பங்களுக்கும் நாளை மறுதினம் ரூபா 25000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதுவரை மாகாணம் முழுவதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 92 வீதமானவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.





