பேருந்தில் போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் சாரதி உட்பட இருவர் அம்பாறை தலைமையக காவல் துறையால் இன்று சனிக்கிழமை (18) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை தலைமையககாவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள்காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.