வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (23) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கண்டி துணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, பேராதனை – ஹிந்தகல பகுதியில் நேற்று காலை ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஹிந்தகல, தொழுவ வீதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு – முகத்துவாரம், ரஜமல்வத்தை பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 300 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



