போலி தகவல்களை வெளியிடும் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை…..!

போலி தகவல்களை வெளியிடும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுப்பது  குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

இது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிடுவதாகவது,

போலி தகவல்களை வெளியிடும் சில இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை  அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவ்வாறு செய்வது அவசியம் எனவும் சமூகத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

அனைத்து ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன.

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள எல்லைகளுக்குள் பாதுகாக்கப்படுவதையும் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊடக சுதந்திரம் என்பது சமநிலையான மற்றும் வெளிப்படையான தன்மையை கொண்டிருக்க வேண்டும்.

எனவே, ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு போலி தகவல்களை வெளியிடுவதன் மூலம் சமூக விழுமியங்களைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, போலி தகவல்களை வெளியிடும் சில இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் உரிமங்களை  அரசாங்கம் மீளப்பெற நடவடிக்கை எடுக்கும் செயல் அவசியமான ஒரு பணியாகும்.

இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு சுயாதீன ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழுவை நிறுவுவதற்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.