அதிகரிக்கப்பட்ட மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு செவ்வாய்க்கிழமை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் 7,500 ரூபாவாக இருந்த இக்கொடுப்பனவு, தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தகுதியுள்ள மாணவர்களுக்கான 2026 ஜனவரி மாதத்திற்குரிய 10,000 ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான தீர்மானம் 2026 வரவு செலவுத் திட்ட (Budget) முன்மொழிவுகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





