புத்தளம், மதுரங்குளி, கடையமோட்டை, கிழமடுச்சேனை பகுதியில், லொறி ஒன்று மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தரம் 03 இல் கல்வி கற்கும் ஆண் மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் பலத்த காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



