மத்திய கிழக்கு விமான சேவைகள் வழமைக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அப்பகுதிக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் படிப்படியாக வழமைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்கள் வருமாறு,

இயக்கப்படும் விமானங்கள் (மார்ச் 05, 2026):

UL231 / UL232: கொழும்பிலிருந்து துபாய் நோக்கிய விமானம் பிற்பகல் 14:50 இற்குப் புறப்பட்டு, டுபாயிலிருந்து இரவு 19:10 இற்கு (டுபாய் நேரம்) மீண்டும் கொழும்பு திரும்பும்.

UL265 / UL266: கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிய விமானம் மாலை 18:15 இற்குப் புறப்பட்டு, ரியாத்திலிருந்து இரவு 22:35 இற்கு (ரியாத் நேரம்) மீண்டும் கொழும்பு திரும்பும்.

இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள்:

இன்று (மார்ச் 05) துபாய், டோஹா, தம்மாம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கான பின்வரும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன:

டுபாய்: UL225 / UL226

டோஹா: UL217 / UL218

தம்மாம்: UL253 / UL254

குவைத்: UL229 / UL230

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களின் விமானங்களின் தற்போதைய நிலையை www.srilankan.com என்ற இணையதளத்தின் ஊடாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இலங்கை சுற்றுலாப் பயணிகளை வரவேற்க எப்போதும் தயாராக இருப்பதாகவும், சிக்னேச்சர் விருந்தோம்பலுடன் சேவைகள் தொடரும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.