மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை பதிவு செய்வதில் கிராம அலுவலர்கள் அதிகபட்சம் கவனம் செலுத்த வேண்டும்

மலையக பெருந்தோட்ட பகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான வயதெல்லையை பூர்த்திசெய்வர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யும் உறிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளுவதற்கு பெருந்தோட்ட பகுதியில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளரும் அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினருமான இரா. ஜீவன்  இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக  மேலும் தெரிவிக்கையில்,

வருடம் தோறும் புதிய வாக்காளர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் கிராம சேவையாளர்கள் மூலம் தேர்தல் திணைக்களம் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில்  பெருந்தோட்டங்களை சேர்ந்தவர்கள் முறையாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத காரணத்தால்  அரச தொழில் மற்றும் கல்வி போன்ற  நடவடிக்கைகள் பெற்றுக்கொள்வதற்கு கிராமசேவகர் பதிவு சான்றிதழ்கள் பெறுவதற்கு  பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தால் மாத்திரமே பதிவு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

மலையகத்தில் பல்வேறு தோட்டங்களுக்கு கிராமசேவையாளர்கள்  சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் விவசாய உத்தியோகஸ்தர்கள் போன்ற அரச உத்தியோகத்தர்கள்  செல்வதே இல்லை. என பெருந்தோட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் புதிய வாக்காளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முழுமைபெறுமா ? என்பது சந்தேகமே ! எனவே தேர்தல்கள் திணைக்களம் மலையக பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகங் கள் கிராம சேவையாளர்கள் புதிய வாக்கா ளர்களை இணைத்துக்கொள்வதற்கு மக்களின் குடியிருப்புகளுக்கும் குறிப்பாக பெருந் தோட்டங்களுக்கும் நேரடியாக சென்று தகவல் திரட்டுவதை  உறுதிப்படுத்த வேண்டும்.

அது சாத்தியப்படாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு தற்காலிக உத்தியோகஸ்தர் களையாவது நியமித்து வாக்களிக்கும் தகுதி பெற்றவர்களை புதிய வாக்காளர்களாக பதிவுசெய்யும் நடைமுறைகளை முழுமையாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.