வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்!

உள்ளூராட்சி மன்ற பெண்களின் வகிபாகத்தினை அதிகரித்தல், பெண்கள் தொடர்பில் இயங்குகின்ற சிவில் சமூக அமைப்புக்கிடையில் வலையமைப்பினை உருவாக்குதல் போன்ற விடயங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடலினை  காவியா சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகம் இன்று மட்டக்களப்பு Green garden Hotel இல் நடாத்தியது.

Search for Common Ground – SFCG அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான நிதியுதவியினை UNDP வழங்குகின்றது . இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக பங்குதாரர் நிறுவனமான காவியா சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகம் உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கான வலுப்படுத்தல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.  இதன் இறுதி நிகழ்வாக மட்டக்களப்பில புதன்கிழமை (03) உதவி உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் கலந்துரையாடலினை உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையே ஒழுங்குசெய்திருந்தது.  காவியா சுயதொழில் அபிவிருத்தி பெண்கள் நிறுவகம் இது தொடர்பில் திட்ட முன்மொழிவுகளை எவ்வாறு உருவாக்குவது, தொடர்பாடல் விருத்தி, தலைமைத்துவ பயிற்சி, பரிந்துரைப்பது தொடர்பான பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகளை இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது . இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் போது உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் தமக்குள்ள பிரச்சினைகள் மற்றும் சவாலகள் குறித்த பரிந்துரையொன்றினை உதவி உள்ளூராட்சி மன்ற ஆணையாளரிடம் கையளித்தனர்.

மேலும் இக்கலந்துரையாடல்களின் போது பங்குபற்றிய தவிசாளர்களும் தம்முடைய பக்கத்தில் காணப்படுகின்ற நிர்வாக ரீதியான சவால்கள் குறித்து கருத்து வெளியிட்டனர். இதற்கு பதிலளித்த உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் தம்முடைய பக்கத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். இவ்வாறான வலுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக அபிவிருத்திகளையும் நிலையான தீர்வுகளையும் நோக்கி பயணிப்பதற்கான முன்னெடுப்புக்கள் இதன் மூலம் உருவாக்கும் என்பது பஙகுபற்றறுனர்களின் பொதுவான கருத்தாக அமைந்திருந்தது.