தற்போது நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) மூதூர் பிரதான வீதியில் நடைபெற்றது.
“முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் தேசிய செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கை தழுவிய ரீதியில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மூதூர் பகுதியில், மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
நிகழ்வின்போது, போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தையும் அதன் பாதிப்புகளையும் எடுத்துரைக்கும் விழிப்புணர்வு பதாதைகள் வாகனங்களில் பொருத்தப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மூதூர் பொலிஸ் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சப்ரான், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.








