மூதூர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கையின அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, மூதூர் வைத்தியசாலை வைத்தியர்கள் செவ்வாய்க்கிழமை (31) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர  பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர்.

சுகாதார அமைச்சு மேற்கொண்டதாகக் கூறப்படும் அநியாயமான மற்றும் நடைமுறைக்கு புறம்பான வைத்தியர் இடமாற்றங்களுக்கு எதிர்ப்பாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடமாற்றங்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்படாமல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கிராமப்புறங்களில் வைத்தியர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சிரமம் அடையாத வகையில் அவசர சேவைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

மேலும், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.