பொரள்ளை மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மேலும் இரண்டு சிறைக்காவலர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரள்ளை மெகசின் சிறைச்சாலை வளாகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை (27) கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸாரும், கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், முதற்கட்டமாக சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் செவ்வாய்க்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, அதே செவ்வாய்க்கிழமை (28) மேலும் இரண்டு சிறைக்காவலர்களை பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக பொரள்ளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொரள்ளை பொலிஸார், கொழும்பு ம் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





