யாழில் இருந்து பாலை தீவு சென்ற படகு விபத்து ; இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 13 வயது சிறுவன், 04 பெண்கள் 08 ஆண்கள் என 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.