800 லிற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(04.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏழாலை பகுதியைச் சேர்ந்த இருவர் டீசலை அதிக விலையில் விற்பனை செய்வதற்காகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும், சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 800 லீட்டர் டீசலும், அதை பதுக்க பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.





