யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்குள்ளான நபர் சிறையில் உள்ள ஒருவருக்கு உணவு வழங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்பகை காரணமாக சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





